திருச்சி திருவானைக்காவல் நடு கொண்டேம்பேட்டை அகிலா நகரை பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திகேயன்(35). இவருக்கும் வசந்த பிரியா(30) என்பவருக்கும் காதல் திருமணம் நடந்து சாமிநாதன்(8) என்ற மகன் உள்ளார். வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த கார்த்திகேயன் இரண்டு நாட்களுக்கு முன்பு திருச்சிக்கு திரும்பியுள்ளார். அப்பொழுது கார்த்திகேயன் கடும் சோகத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் பூட்டி இருந்த அவர்கள் வீட்டுக்குச் சென்ற உறவினர் ஒருவர் கதவை தட்டியும் அவர்கள் திறக்காததால், ஜன்னல் வழியாக பார்த்துள்ளனர். அப்பொழுது கார்த்திகேயன், அவரது மகன் சாமிநாதன் மற்றும் கார்த்திகேயனின் தாய் வசந்தா (68) ஆகிய மூன்று பேரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது. இது குறித்து ஸ்ரீரங்கம் போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. அங்கு வந்த போலீசார் மூன்று பேரின் சடலத்தையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அவர்கள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட பொழுது கார்த்திகேயனின் மனைவி வசந்த பிரியா வீட்டில் இல்லை என கூறப்படுகிறது. போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தனது மனைவி வசந்த பிரியா குறித்து பல்வேறு தகவல்கள் கார்த்திகேயனுக்கு தெரிய வந்ததை தொடர்ந்து அவர் மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது.