திருச்சி அரியமங்கலம் ஸ்ரீனிவாசா நகர் பகுதியை சேர்ந்தவர் அரவிந்தன்(27). இவருக்கும் தமிழ்செல்வி என்பவருக்கும் கடந்த 10 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்று உள்ளது. இந்நிலையில் கணவன் மனைவியிடையே தவறான புரிதல் காரணமாக மனமுறிவு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக கடந்த 4 மாதங்களுக்கு முன்பாக கணவரை விட்டு தமிழ்செல்வி பிரிந்து சென்று விட்டார். அந்நாள் முதல் மிகுந்த மன உளைச்சலுடன் அரவிந்தன் காணப்பட்டுள்ளார். இந்நிலையில் துாங்க செல்வதாக வீட்டில் உள்ளவர்களிடம் கூறி விட்டு தனது அறைக்கு சென்று கதவை சாத்திக்கொண்ட அவர் வெகு நேரமாகியும் எழுந்து வராதததை கண்டு வீட்டில் உள்ளவர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. கதவை தட்டினாலும் அரவிந்தன் திறக்காததால், கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்று பார்த்த போது பெற்றோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். காரணம் அரவிந்தன் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருந்தார். இது குறித்து அரியமங்கலம் காவல் நிலையத்திற்கு தாய் ஜெயமணி(49) கொடுத்த புகாரின் பேரில் உடலை கைப்பற்றிய போலீசார் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.