தமிழகத்தில் தற்போதைய அரசியல் நிலவரம் குழப்பாக உள்ளது. அதிமுக-பாஜ கூட்டணி உடைந்துள்ளது. இது தொடருமா? என்கிற கேள்வி ஓரு பக்கம் இருக்க திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் அதிமுகவிற்கு செல்லுமா? என்கிற கேள்வி எழுந்துள்ளது. பாஜவை கழட்டி விட்டதால் சிறுபான்மையினரின் வாக்குகளை பெற்றுவிடலாம் என்கிற அதிமுகவின் நம்பிக்கை நிறைவேறுமா? என்பது தெரியவில்லை. இந்த நிலையில் தமிழ்நாட்டில் லோக்சபா தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும் என்பது தொடர்பாக India TV-CNX நிறுவனம் கருத்து கணிப்புகளை நடத்தி முடிவுகளை அறிவித்துள்ளது. இதன்படி தமிழ்நாட்டில் மொத்தம் 39 லோக்சபா தொகுதிகளில்
திமுக 21 இடங்கள்..
காங்கிரஸ் 7 இடங்கள்…
அதிமுக 6 இடங்கள்..
பாமக -1 ..
இதர கட்சிகள் 4 என்றும் பாஜகவுக்கு தமிழ்நாட்டில் ஒரு இடம் கூட கிடைக்காது என்கிறது இந்த கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2024 லோக்சபா தேர்தலில் தமிழ்நாட்டில் கட்சிகள் பெறக் கூடிய வாக்கு சதவீதம்: திமுக 31% அதிமுக 25% காங்கிரஸ்- 11 % பாஜக- 7% பாமக -6% இதர கட்சிகள்- 20% என குறிப்பிடப்பட்டுள்ளது. க்
சில நாட்களுக்கு முன்னர் டைம்ஸ் நவ் டிவி சேனல் நடத்திய கருத்து கணிப்பில், திமுக 20 முதல் 24 இடங்கள்; காங்கிரஸ் 9 முதல் 11 இடங்கள்; அதிமுக 4 முதல் 8 இடங்கள் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. பாஜகவுக்கு 0 முதல் 1 எனவும் டைம்ஸ் நவ் சர்வே முடிவுகள் தெரிவித்திருந்தன.