திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள பெரிய சூரியூர் கிராமத்தில் ஆண்டுதோறும் தமிழர் திருளான பொங்கல் பண்டிகைக்கு மறுநாள் தை 2 ஆம் தேதி மாட்டுப் பொங்கல் அன்று சூரியூர் ஸ்ரீ நற்கடல் குடி கருப்பணசாமி கோயில் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி விமர்சையாக நடத்தப்படுவது வழக்கம். இதில் திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை, பெரம்பலூர், உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 750 ஜல்லிக்கட்டு காளைகளும் 550மாடுபிடி வீரர்களும் கலந்து கொண்டனர் போட்டியானது காலை 7.50 மணிக்கு தொடங்கியது இந்த போட்டியில் ஸ்ரீ நற்கடல் குடி கருப்பண்ணசாமி கோவில் மாடு முதலில் அவிழ்த்து விடப்பட்டது அதன் பிறகு முறையாக ஜல்லிக்கட்டு காளைகள் அவிழ்த்து விடப்பட்டது இந்த போட்டியை திருச்சி ஆர்டிஒ பார்த்தீபன் தொடங்கி வைத்தார். போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெறும் ஜல்லிக்கட்டு காளைகளுக்கும் ஜல்லிக்கட்டு வீரர்களுக்கும் மிக்ஸி, கிரைண்டர், சைக்கிள், கட்டில், பீரோ, தங்க காசு, வெள்ளி காசு, ரொக்கம் என ஏராளமான பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டது
இதில் அதிக காளைகளை அடக்கிய நாமக்கல்லை சேர்ந்த கார்த்திக் என்ற வீரருக்கு திருவெறும்பூர் டிஎஸ்பி அறிவழகன் பைக்கை பரிசாக வழங்கினார்.
அதேப்போல் சிறந்த காளையாக இலந்தப்பட்டியை சேர்ந்த தமிழ் என்பவரின் மாட்டிற்கு வீட்டுமனை முதல் பரிசாகவும்,இரண்டாவது சிறந்த மாடாக செங்குறிச்சியை சேர்ந்த கருப்பையா என்பவரின் மாட்டிற்கு தங்க மோதிரமும், மூன்றாவது சிறந்த மாட்டிற்கான பரிசாக நரியப்பட்டி சேர்ந்த தனபால் என்பவரது மாட்டிற்கு 10 ஆயிரம் ரொக்கமும் பரிசாக வழங்கப்பட்டது.இந்த ஜல்லிக்கட்டு போட்டிக்கு 358 மாடுபிடி வீரர்கள் 7 சுற்றுகளாக கலந்து கொண்டனர் இதில் 658 ஜல்லிக்கட்டு காளைகள் கலந்து கொண்டது. இதில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த திருவெறும்பூர் போக்குவரத்து சப் இன்ஸ்பெக்டர் சுரேஷ் துவாக்குடி போக்குவரத்து ஆர்ஐ ரத்தினம் உட்பட 72 பேர் காயமடைந்தனர். அனைவரும் சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த ஜல்லிக்கட்டு விழாவில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, இலங்கை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டைமான், திருச்சி எஸ் பி வருண்குமார் உட்பட ஏராளமான கலந்து கொண்டனர்.