கேரள திரையுலகில் நடிகைகளுக்க பாலியல் தொந்தரவு செய்தவர்கள் மீதான புகார்கள் வெளிவந்தவண்ணம் உள்ளது. இது கேரள திரையுலகை கலக்கி வருகிறது. இந்த பிரச்னை குறித்து முன்னாள் நடிகரும், தற்போதைய மத்திய அமைச்சருமான சுரேஷ்கோபியிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு சுரேஷ் கோபி கோபத்துடன் கூறியதாவது:
“நான் புரிந்து கொண்ட வகையில் இது எல்லாம் உங்களுக்கான தீனி மாதிரி. இதை பயன்படுத்தி உங்களால் பணம் சம்பாதிக்க முடியும்.அதில் எந்த பிரச்சினையும் இல்லை. ஆனால் இந்த பிரச்சினைகள் நீதிமன்றத்தின் முன் உள்ளன. நீங்கள் (ஊடகங்கள்) உங்களுடைய சொந்த ஆதாயங்களுக்காக மக்களைஒருவருக்கொருவர் சண்டையிட வைப்பது மட்டுமல்லாமல், சினிமா துறையின் மீதான பொதுமக்களின் பார்வையையும் தவறாக வழி நடத்துகிறீர்கள். புகார்கள் தற்போது குற்றச்சாட்டு வடிவில் உள்ளன. நீங்கள் மக்களுக்கு என்ன சொல்கிறீர்கள்? நீங்கள் நீதிமன்றமா? நீதிமன்றம் முடிவு செய்யும். நீதிமன்றம் முடிவு செய்யட்டும்” என்று சுரேஷ் கோபி கூறினார்.