உத்தராகண்ட் சில்க்யாரா சுரங்கத்தில் சிக்கித் தவித்த 41 தொழிலாளர்களும் 17 நாட்கள் போராட்டத்திற்கு பிறகு வெற்றிகரமாக மீட்கப்பட்டனர். கடும் சவால்களை கடந்து தொழிலாளர்களை பாதுகாப்பாக மீட்ட மீட்புக் குழுவினருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.உத்தராகண்ட் சில்க்யாரா சுரங்கத்தில் சிக்கித் தவித்த 41 தொழிலாளர்களும் 17 நாட்கள் போராட்டத்திற்கு பிறகு வெற்றிகரமாக மீட்கப்பட்டனர். கடும் சவால்களை கடந்து தொழிலாளர்களை பாதுகாப்பாக மீட்ட மீட்புக் குழுவினருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
17 நாட்கள் போராட்டத்துக்குப் பின் 41 தொழிலாளர்களை மீட்ட மீட்புக் குழுவுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பாராட்டு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “உத்தரகாண்ட் சுரங்கப்பாதையில் சிக்கியிருந்த தொழிலாளர்கள் அனைவரும் மீட்கப்பட்டதை அறிந்து நிம்மதியாகவும், மகிழ்ச்சியாகவும் உணர்கிறேன். 17 நாட்களாக சுரங்கத்திற்குள் தொழிலாளர்கள் சந்தித்த தடைகள், மனித சகிப்புத் தன்மைக்கு சான்று; அவர்களின் மன உறுதிக்கு தேசம் தலை வணங்குகிறது. வரலாற்றில் மிகவும் கடினமான மீட்புப் பணிகளில் ஒன்றான இதனை நம்பமுடியாத மன உறுதியுடன் செயல்பட்டு தொழிலாளர்களை மீட்டுள்ள மீட்புக்குழுவினர், நிபுணர்களை வாழ்த்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.17 நாட்கள் போராட்டத்துக்குப் பின் 41 தொழிலாளர்களை மீட்ட மீட்புக் குழுவுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பாராட்டு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “உத்தரகாண்ட் சுரங்கப்பாதையில் சிக்கியிருந்த தொழிலாளர்கள் அனைவரும் மீட்கப்பட்டதை அறிந்து நிம்மதியாகவும், மகிழ்ச்சியாகவும் உணர்கிறேன். 17 நாட்களாக சுரங்கத்திற்குள் தொழிலாளர்கள் சந்தித்த தடைகள், மனித சகிப்புத் தன்மைக்கு சான்று; அவர்களின் மன உறுதிக்கு தேசம் தலை வணங்குகிறது. வரலாற்றில் மிகவும் கடினமான மீட்புப் பணிகளில் ஒன்றான இதனை நம்பமுடியாத மன உறுதியுடன் செயல்பட்டு தொழிலாளர்களை மீட்டுள்ள மீட்புக்குழுவினர், நிபுணர்களை வாழ்த்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதேபோல் பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், “உத்தரகாண்ட் சுரங்கத்தில் மீட்கப்பட்ட அனைவருக்கும் வாழ்த்துக்கள். மீட்புப் பணியின் வெற்றி, அனைவரையும் உணர்ச்சி வசப்பட வைக்கிறது. நீண்ட காத்திருப்புக்குப் பிறகு, அவர்கள் தங்கள் அன்புக்குரியவர்களை சந்திக்கிறார்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.இதேபோல் பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், “உத்தரகாண்ட் சுரங்கத்தில் மீட்கப்பட்ட அனைவருக்கும் வாழ்த்துக்கள். மீட்புப் பணியின் வெற்றி, அனைவரையும் உணர்ச்சி வசப்பட வைக்கிறது. நீண்ட காத்திருப்புக்குப் பிறகு, அவர்கள் தங்கள் அன்புக்குரியவர்களை சந்திக்கிறார்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.