கடந்த ஜூன் 14ம் தேதி அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி தற்போது சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரது தரப்பில் ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதை நீதிபதிகள் அனிருதா போஸ், பேலா எம்.திரிவேதி ஆகியோர் அடங்கிய அமர்வு கடந்த மாதம் 30-ந் தேதி விசாரித்தது. செந்தில் பாலாஜி மற்றும் அமலாக்கத்துறை சார்பில் விசாரணையை தள்ளிவைக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டது. அதையடுத்து மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையை சுப்ரீம் கோர்ட்டு நவம்பர் 20-ந் தேதிக்கு (இன்றைக்கு) தள்ளிவைக்கப்பட்டது. இந்நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் மனு மீதான விசாரணையை இன்று நீதிபதிகள் பேலா எம்.திரிவேதி, சதீஷ் சந்திர சர்மா ஆகியோர் அடங்கிய உச்சநீதிமன்ற அமர்வு இன்று விசாரிக்கிறது. உடல் நிலைக்குறைவு காரணமாக அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த ஒரு வார காலமாக சென்னை ஒமாந்தூரார் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார் என்பது குறிப்பிடதக்கது..