அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக தன்னை அங்கீகரிக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக்கோரி எடப்பாடி பழனிசாமி இடையீட்டு மனு தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் இன்று அனுமதி வழங்கியது. அத்துடன் 3 நாட்களுக்குள் பதில் அளிக்க தேர்தல் ஆணையத்திற்கும், ஓபி.எஸ்சுக்கும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இடையீட்டு மனுவின் நகலை தேர்தல் ஆணைய வழக்கறிஞருக்கு வழங்கவும் உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியதுடன் . விசாரணையை பிப்ரவரி 3ம் தேதிக்கு தள்ளிவைத்தது.