Skip to content

காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்துக்கு எதிரான வழக்கு… உச்சநீதிமன்றம் இன்று விசாரணை

ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்த்து வழங்கிய சட்டம் 370-ஐ மத்திய அரசு கடந்த 2019ம் ஆண்டு ஆகஸ்ட் 5-ம் தேதி ரத்து செய்தது. மேலும், ஜம்மு-காஷ்மீரை இரண்டாக பிரித்து ஜம்மு-காஷ்மீர், லடாக் என இரு யூனியன் பிரதேசங்களாக பிரித்து மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டில் கொண்டு வந்தது.

ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்த்து சட்டம் 370-ஐ மத்திய அரசு ரத்து செய்ததை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. பல ஆண்டுகளாக இந்த வழக்கு விசாரணைக்கு வராமல் இருந்தது.  இந்நிலையில், ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்த்து வழங்கும் சட்டம் 370 ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணைக்கு வர உள்ளது.  தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையில் 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு இந்த வழக்கை விசாரிக்கிறது. திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை தினமும் விசாரணை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!