நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான், தன்னை பாலியல் பலாத்காரம் செய்து கருக்கலைத்ததாக நடிகை விஜயலட்சுமி சென்னை போலீசில் புகார் கொடுத்தார். இந்த புகார் தொடர்பாக வளசரவாக்கம் போலீசார் கடந்த சில தினங்களுக்கு முன் சீமானிடம் விசாரணை நடத்தி வாக்குமூலம் வாங்கினர். இதைத் தொடர்ந்து அவர் தன் மீதான விசாரணைக்கு தடை கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதில் அரசியல் காரணங்களுக்காக தன் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது, நடிகையுடன் அதிகாரபூர்வமற்ற முறையில், சமரச பேச்சு நடத்தி வருகிறோம் என கூறி இருந்தார்.
அந்த மனு மீதான விசாரணை இன்று காலை நடந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, சீமான் மீது விசாரணை நடத்த ஐகோர்ட் பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தார். அத்துடன், இந்த வழக்கில் தமிழ்நாடு அரசு பதில் அளிக்கவும், நடிகையுடன் பேச்சுவார்த்தை நடத்தி முடிவெடுக்க 2 மாத காலம் அவகாசம் வழங்கியும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.