Skip to content
Home » டாக்டர் சுப்பையா வழக்கு……சென்னை ஐகோர்ட் தீர்ப்பு….. உச்சநீதிமன்றம் அதிருப்தி

டாக்டர் சுப்பையா வழக்கு……சென்னை ஐகோர்ட் தீர்ப்பு….. உச்சநீதிமன்றம் அதிருப்தி

  • by Senthil

சென்னையில் கடந்த 2013ம் ஆண்டு நரம்பியல் மருத்துவர் சுப்பையா,  சொத்து தகராறு காரணமாக கூலிப்படையினரால் கொலை செய்யப்பட்ட வழக்கில், 7 பேருக்கு தூக்கு தண்டனையும் 2 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதித்த விசாரணை நீதிமன்றத்தின் தீர்ப்பை ரத்து செய்து, 9 பேரையும் விடுவித்த சென்னை உயர் நீதிமன்றம்.

இந்த தீா்ப்பை எதிர்த்து சுப்பையாவின் மனைவி உச்சநீதிமன்றத்தில், தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கில், “ஆயுள் தண்டனை மற்றும் மரண தண்டனை விதிக்கப்பட்ட ஒரு வழக்கின் தீர்ப்பை முற்றிலுமாக மாற்றி, உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு ஏற்க முடியாத ஒன்று. இதுவரை இப்படி ஒரு தீர்ப்பை பார்த்தது இல்லை” என உச்ச நீதிமன்றம் அதிருப்தி வெளியிட்டது.

விசாரணை நீதிமன்றத்தால் மரண தண்டனை விதிக்கப்பட்ட 7 பேரும் 4 வாரத்தில் பதிலளிக்க நீதிபதிகள் பெலா திரிவேதி, சதீஷ் சந்திரஷர்மா அமர்வு உத்தரவு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!