‘எங்க தெருவுல லைட் எரியல, கவுன்சிலர் கிட்ட 3 முறை போன் பண்ணிட்டேன் அவரும் கண்டுக்கல’ என்றபடி சுப்புனி காப்பிக்கடை பெஞ்ச்சில் வந்து அமர்ந்தார் சந்துக்கடை காஜாபாய். ‘யோவ் பாய் திருச்சி கார்ப்பரேஷன்ல எலெக்ட்ரிஷன் பற்றாக்குறைனுஉனக்கு தெரியும் வேணுமுனே லொல்லு பண்றியா? ’ என்று சளித்துக்கொண்ட ஸ்ரீரங்கம் பார்த்தசாரதி ‘ எலெக்ட்ரிஷனுக்கு ஹெல்பரா இருந்தவர் இப்ப ஆர்.ஐயா ஆயிட்டார் தெரியுமா?’ என கூற, ‘ என்ன பாய் எலெகட்ரிஷனுக்கு ஹெல்ப்பரா இருந்தவர் ஆர்.ஐ ஆயிட்டாரா? ’ என பொன்மலை சகாயம் ஆச்சர்யப்பட சுப்புனிகாப்பிக்கடை பெஞ்ச் களை கட்ட ஆரம்பித்து. ‘ ஆமா சகாயம் 3 வருஷத்துக்கு முன்னாடி எலெக்ட்ரிஷனுக்கு ஹெலப்பரா இருந்த ‘தேவன்’ பெயரக்கொண்ட அவர் ரங்கநாதர் கோவில் ஏரியாவுக்கு பில் கலெக்டரா வந்தார்.
இப்ப என்னாடானா ஆர்.ஐ ஆயிட்டார். கொடும என்ன தெரியுமா? ஒரிஜினலா இருந்த ஆர்.ஐ செந்தில் என்பவரை தூக்கிட்டு அந்த ‘தேவன்’ பெயரைக்கொண்ட பில் கலெக்டரை ஆர்.ஐ யா பிரமோசன் கொடுத்துட்டாங்க’ என பார்த்தா ஆதங்கபட… ‘ அப்டினா திருச்சி மாநகராட்சியில ஸ்கில்டா இருந்த ஒருவரை ரெவென்யூவுக்கு மாத்தி இருக்காங்க’ என பொன்மலை சகாயம் விபரமாக கூறினார். ‘ சரி சாமி இந்த விஷயம் கமிஷனருக்கு தெரியமா? ‘ என காஜா பாய் கேட்க ‘ சும்மா கத்தாத பாய், இந்த விஷயம் மந்திரி காதுல விழுந்துடுமோனு அதிகாரிங்க எல்லாரும் பயந்துகிட்டு இருக்காங்க நீவேற’ என ஸ்ரீரங்கம் பார்த்தசாரதி சிரிக்க… பொன்மலை சகாயம், சந்துக்கடை காஜாபாயும் கொல்லனு சிரித்துக்கொண்டே காப்பி குடிக்க ஆரம்பித்தனர்.