Skip to content

9 மாதங்கள் கழித்து மார்ச்-16ல் பூமிக்கு திரும்பும் சுனிதா வில்லியம்ஸ்..

  • by Authour

இந்திய வம்சாவளியை சேர்ந்த சுனிதா வில்லியம்ஸ் நாசா விண்வெளி ஆய்வு மையத்தில் பணியாற்றி வருகிறார். இவர் ஏற்கனவே 2 முறை விண்வெளி நிலையத்துக்கு சென்றுள்ளார். கடந்த ஜூன் 5 ம் தேதி ஸ்டார்லைனர் விண்கலன் மூலம் அவரும் பேரி வில்மோரும் விண்வெளி நிலையம் சென்று 8 நாட்கள் அங்கு தங்கி ஆய்வு செய்துவிட்டு பூமிக்கு திரும்புவதாக திட்டமிட்டிருந்தனர். ஆனால் ஸ்டார்லைனர் விண்கலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக பூமிக்கு திரும்புவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. அவர்கள் 9 மாதங்கள் விண்வெளி மையத்திலேயே தங்கி உள்ளனர். இந்நிலையில், சுனிதா வில்லியம்ஸ் மற்றும் பாரி வில்மோர் ஆகியோர் 9 மாதங்கள் விண்வெளியில் கழித்த பிறகு,எலான் மஸ்கிற்கு சொந்தமான, ஸ்பேஸ் எக்ஸ் டிராகன் விண்கலத்தின் மூலம் மார்ச் 16ல் பூமிக்கு அழைத்து வரப்படுவார்கள் என்று நாசா தெரிவித்துள்ளது.

error: Content is protected !!