Skip to content

சுங்கசாவடியில் தேமுதிகவினர் முற்றுகை போராட்டம்….. சமயபுரத்தில் பரபரப்பு…

  • by Authour

திருச்சி மாவட்டம், சமயபுரம் அருகே சுங்கச்சாவடியில் சுங்க கட்டண உயர்வை கண்டித்தும்,சுங்க கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தியும் மத்திய அரசை கண்டித்து தேமுதிக வடக்கு மாவட்டம் சார்பில் முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 20 சுங்கச்சாவடிகளில் கடந்த செப்டம்பர் 1ஆம் தேதி நள்ளிரவு முதல் சுங்க கட்டணத்தை உயர்த்தினர்.. இதில் சமயபுரத்தில் உள்ள சுங்கச்சாவடியில் கார், வேன்,பேருந்து, கனரக வாகனங்கள் உள்ளிட்ட அனைத்திற்கும் சுங்க கட்டணம் உயர்ந்தது. இந்நிலையில் சுங்க கட்டண உயர்வை கண்டித்தும்,சுங்க கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தியும் முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என அக்கட்சியின் நிறுவனத் தலைவர் விஜயகாந்த் மற்றும் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் அறிவித்திருந்தனர். இந்நிலையில் இன்று சமயபுரம் சுங்கச்சாவடியில் சுங்க கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்தும்,சுங்க்க் கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தியும் மத்திய அரசை கண்டித்து தேமுதிக வடக்கு மாவட்டம் சார்பில் வடக்கு மாவட்ட செயலாளர் கே.எஸ். குமார் தலைமையில் சமயபுரம் சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அப்போது போலீசார் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை தடுத்து நிறுத்தினர். அதையும் மீறி நிர்வாகிகள் சுங்கச்சாவடி முற்றுகையிட முயன்றனர். அப்போது போலீசாருக்கும் தேமுதிக நிர்வாகிக்கும் லேசான தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து அந்த வழியாக வந்த பேருந்தை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்தப் போராட்டத்தில் ரோடு போட மக்கள் வரி, எதுக்கையா சுங்க வரி, காருக்கும் வரி, லாரிக்கும் வரி, வண்டிக்கும் வரி எதுக்கையா சுங்கவரி, சுங்கச்சாவடி பராமரிப்பு இல்லை, கட்டண உயர்வு மட்டும் எதற்கு,

காரணம் சொல்லு அதற்கு உள்ளிட்ட கோஷங்களை எழுப்பியும் உயர்த்திய சுங்க கட்டணத்தை திரும்ப பெற வலியுறுத்தியும் கண்டன கோஷங்கள் எழுப்பினர்.

பின்னர் முற்றுகை போராட்டத்தில் ஈடுப்பட்ட ஈடுபட்ட தேமுதிக நிர்வாகிகள் 56 பேரை போலீசார் கைது செய்து சுங்கச்சாவடி பகுதி உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர். இந்த முற்றுகை போராட்டத்தில் மாவட்ட அவைத் தலைவர் லானா முருகேசன், மாவட்ட பொருளாளர் ஆறுமுகம்,மாவட்ட நிர்வாகிகள் சிவக்குமார், பார்த்திபன் மண்ணச்சநல்லூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் வி. பி. தங்கமணி, மேற்கு ஒன்றிய செயலாளர் டைல்ஸ் சுதாகர், நகர செயலாளர் ஜனனி ஆறுமுகம், நகர துணை செயலாளர் சரவணன், மற்றும் லால்குடி மண்ணச்சநல்லூர் ஒன்றிய தேமுதிக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *