கோடை விடுமுறையொட்டி மற்றும் வெயிலின் தாக்கம் அதிகளவில் இருப்பதால் விடுமுறையை கழிப்பதற்காக பொதுமக்கள் குடும்பத்துடன் கோவை குற்றாலத்தை நோக்கி படையெடுத்துள்ளனர்.
கோவை மாவட்டம் சாடிவயல் அருகே உள்ள கோவை குற்றாலத்தில் கோடை விடுமுறையொட்டி மற்றும் வெயிலின் தாக்கம் அதிகளவில் இருப்பதால் அதிகமான சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது.
கோவை குற்றாலம் நீர் வீழ்ச்சியில் தண்ணீர் வரத்தும் இருந்தால் சுற்றுலா பயணிகள் நீர்வீழ்ச்சியில் நீண்ட நேரம் குளித்து
மகிழ்ந்தனர்.சுற்றுலா பயணிகள் பாதுகாப்பிற்காக வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
சுற்றுலா பயணிகள் அருவிக்கு சென்று வர கூடுதல் வாகனங்கள் இயக்கப்பட்டது.நீண்ட வரிசையில் நின்று குளித்து மகிழ்ந்தனர். மேலும் பள்ளி,கல்லூரி விடுமுறை பொதுமக்கள் குழந்தைகளுடன் குலதலமாக குளிக்க வந்தனர்
புதுப்பொலிவுடன் கோவை குற்றாலம் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக திறந்து வைக்கப்பட்டன இன்று ஒரே நாளில் நாலாயிரத்துக்கும் மேற்பட்ட பயண சீட்டுகள் பெற்றுக் கொண்டு பொதுமக்கள் குளிக்க சென்றனர் அதிகமாக தமிழ்நாடு முழுவதும் வந்திருந்த கோவை வெள்ளிங்கிரி மலைக்கு சாமி கும்பிட்ட பிறகு கோவை குற்றாலத்தில் இருந்து குளித்து சென்றனர்