Skip to content

சிக்னல்களில் கோடை பந்தல்- திருச்சி போலீசாரின் சேவை

  • by Authour

கோடைகாலம் தொடங்கி விட்டதால்  மத்தியான வேளைகளில் சாலைகளில் மக்கள் நடமாட்டம்  வெகுவாக குறைந்து விட்டது.  காலை 11 மணியில் இருந்து மாலை 3 மணி வரை  சாலைகளில்  செல்ல முடியாத அளவுக்கு வெயில் சுட்டெரிக்கிறது.

ஆனாலும் இந்த வெயிலிலும்  போக்குவரத்து போலீசார்  சாலைகளில் நின்று தங்கள் கடமைகளை செய்து வருகிறார்கள். அத்துடன்  சாலைகளில் செல்லும் மக்கள் நலனிலும் அக்கறை கொண்டுள்ள  காவல்துறை,  முக்கிய சிக்னல்களில்  நிழற்குடை அமைக்கும் பணியையும் மேற்கொண்டு உள்ளது.

சில சிக்னல்களில்  அதிகபட்சமாக 2 நிமிடம் நிற்கவேண்டி  இருக்கிறது. சில இடங்களில் ஒன்றரை நிமிடம், ஒரு நிமிடம் என நிற்க வேண்டி உள்ளது.  உச்சி வெயிலில்  இப்படி நிற்கும்போது  வாகனங்களில் செல்வோரும் பாதிக்கப்படுகிறார்கள்.

அவர்களின் நலனை கருத்தில் கொண்டு  திருச்சி மாநகர காவல்துறை முக்கிய சிக்னல்களில் நிழற்குடை அமைத்து உள்ளது. திருச்சி புத்தூர் 4 ரோடு கார்னரில் அமைக்கப்பட்டுள்ள நிழற்குடையால்   அந்த வழியாக செல்லும் மக்கள் நிம்மதி யுடன், போலீசாருக்கு  நன்றி தெரிவித்தபடி செல்கிறார்கள். இதுபோல மற்ற முக்கிய  சிக்னல்களிலும் நிழற்குடை அமைக்கும் பணி நடந்து வருகிறது.

error: Content is protected !!