Skip to content
Home » திகாரில் எனது கணவரை கொல்ல சதி.. சுனிதா கெஜ்ரிவால் ‘பகீர்’

திகாரில் எனது கணவரை கொல்ல சதி.. சுனிதா கெஜ்ரிவால் ‘பகீர்’

  • by Authour

அர்விந்த் கேஜ்ரிவால் மற்றும் ஹேமந்த் சோரன் ஆகியோர் கைதை கண்டித்து இண்டியா கூட்டணி கட்சியின் கூட்டம் ஜார்க்கண்ட் மாநிலத்தின் ராஞ்சியில் நேற்று நடந்தது. இந்தக் கூட்டத்தில் திடீர் உடல்நலக்குறைவு காரணமாக ராகுல்காந்தி பங்கேற்கவில்லை.. இந்த பொதுக்கூட்டத்தில் சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், ராஷ்டிரிய ஜனதா தளம் தலைவர் தேஜஸ்வி யாதவ், தேசிய மாநாட்டுக்கட்சித் தலைவர் ஃபரூக் அப்துல்லா, பஞ்சாப் முதல்வர் பகவந் சிங் மான், அர்விந்த் கேஜ்ரிவாலின் மனைவி சுனிதா, ஹேமந்த் சோரனின் மனைவி கல்பனா உள்ளிட்டோர் பங்கேற்றனர். அர்விந்த் கேஜ்ரிவால் மனைவி சுனிதா பொதுக்கூட்டத்தில் பேசுகையில், “சிறையில் கேஜ்ரிவால் சாப்பிடும் ஒவ்வொரு சோறும் கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படுகிறது. குற்றத்திற்கான ஆதாரம் இல்லாமல் கேஜ்ரிவாலை சிறையில் அடைத்தது சர்வாதிகாரம். கேஜ்ரிவாலையும், ஹேமந்த் சோரனையும் சிறையில் அடைத்துள்ளனர். அவர்கள் குற்றவாளிகள் என்று நிரூபிக்கப்படாமலேயே சிறையில் அடைத்துள்ளனர். இது ஒரு சர்வாதிகாரம். என் கணவரின் தவறு என்ன? நல்ல கல்வி, சுகாதார வசதிகளை வழங்கியதா?. தேசபக்தி அவரது இரத்தத்தில் உள்ளது. அவர் ஒரு முன்னாள் ஐஐடி மாணவர். அவர் நினைத்திருந்தால் வெளிநாடு சென்றிருக்கலாம். ஆனால் அவர் தேசபக்திக்கு முன்னுரிமை கொடுத்தார். ஐஆர்எஸ் ஆக இருந்த அவர் பொது சேவை செய்ய பணியை ராஜினாமா செய்தார். தற்போது மக்களுக்காக தனது உயிரைப் பணயம் வைத்துள்ளார். கேஜ்ரிவாலுக்கு அதிகார ஆசை இல்லை. அவர் நாட்டுக்கு சேவை செய்யவே விரும்புகிறார். என் கணவர் சிங்கம். சிறையில் இருக்கும்போதும் நாட்டைப் பற்றி அவர் கவலைப்படுகிறார். கேஜ்ரிவால் ஒரு சர்க்கரை நோயாளி. அவர் கடந்த 12 ஆண்டுகளாக தினமும் 50 யூனிட் இன்சுலின் எடுத்து வருகிறார். ஆனால் அவருக்கு திகார் சிறையில் இன்சுலின் வழங்கப்படவில்லை. ஏனெனில் அவரை கொல்ல விரும்புகிறார்கள்” என்று சுனிதா கெஜ்ரிவால் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *