Skip to content

தற்கொலை செய்யப்போகிறேன்…. பள்ளி வளாகத்தில் ஆசிரியை போராட்டம்

  • by Authour

கரூர் மாவட்டம் பள்ளப்பட்டி பகுதியில் மருதா முஸ்லீம் அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது இதில் 200 மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்த  பள்ளி தாளாளராக  முருகேசன் பொறுப்பு வகித்து வருகிறார். இப்பள்ளியில் தலைமை ஆசிரியராக அருள் முருகன் உள்ளார். இந்த  பள்ளியில்  1990 ஆண்டு முதல் பிரேமா என்பவர் ஆசிரியராக  பணியாற்றி

வந்துள்ளார் இந்நிலையில் தலைமை ஆசிரியர் அருள் முருகன் மற்றும் பள்ளி தாளாளர் முருகேசன் ஆகியோர் ,  பிரேமாவை பள்ளியில் பாடம் எடுக்க வரக்கூடாது என்று  கூறினார்களாம்.

இன்று காலை பள்ளிக்கு வந்த ஆசிரியை பிரேமாவை, உள்ளே வரக்கூடாது என்று பள்ளித் தாளாளர் கூறினாராம்.  இதனை கண்டித்து பள்ளி வளாகம் முன் அமர்ந்து  ஆசிரியை பிரேமா  தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். மேலும் சம்பவ இடத்தில் அரவக்குறிச்சி வட்டார கல்வி அலுவலர் மற்றும் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இது குறித்து ஆசிரியை  பிரேமா கூறுகையில்: ஆண்டு விழா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் தனக்கு பங்களிப்பு வழங்கவில்லை, பள்ளி மாணவர்களின் குறிப்பேடுகளில் அனைத்து ஆசிரியர்கள் புகைப்படம் உள்ளது என்னுடைய புகைப்படம் இருக்காது,சக ஆசிரியர்கள் என்னுடன் பேசக்கூடாது என 2005 ம் ஆண்டு முதல் தற்போது வரை கொடுமைப் படுத்திக் கொண்டிருக்கின்றனர். தற்கொலை செய்து கொள்வதை தவிர வேறு வழி தெரியவில்லை. அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து பள்ளி தாளாளரிடம் விளக்கம் கேட்ட பொழுது ஆசிரியை பிரேமா சரியான தகவல் தெரிவிக்காமலே அதிக விடுப்பு எடுத்து வருவதாகவும் பள்ளி வகுப்பறையில் செல்போன் பயன்படுத்துவதாகவும், இதற்கு கேள்வி எழுப்பியதற்கு உரிய விளக்கம் அளிப்பதில்லை என கூறினார்.

error: Content is protected !!