மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் ரூ. 3.50 கோடி மதிப்பீட்டில் தொற்று நோய்களுக்கு சிகிச்சை வழங்குவதற்கான புதிய கட்டடத்தை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்தார். தொடர்ந்து, கொள்ளிடம் வட்டாரம் அளக்குடி கிராமத்தில் ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் துணை சுகாதார நிலையம், கோமல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் செவிலியர் குடியிருப்பு கட்டடம் ஆகியவற்றை அமைச்சர் மா.சுப்பிரமணியன் காணொளி மூலம் திறந்து வைத்தார். மாவட்ட ஆட்சியர் லலிதா, டிஆர்ஓ. முருகதாஸ், மயிலாடுதுறை எம்.பி. ராமலிங்கம், பூம்புகார் எம்எல்ஏ நிவேதா முருகன், மயிலாடுதுறை எம்எல்ஏ ராஜ்குமார், சீர்காழி எம்எல்ஏ பன்னீர்செல்வம் மற்றும் ஆர்டிஓ யுரேகா, அதிகாரிகள் கலந்து கொண்டனர்
