மயிலாடுதுறை அருகே உள்ள தலைஞாயிறு என்பிகேஆர்ஆர் கூட்டுறவு சர்க்கரை ஆலை 1987 லிருந்து இயங்கி 2017ஆம் ஆண்டு மூடப்பட்டுவிட்டது. இலாபத்தில் இயங்கிவந்த ஆலையானது ஆலை விரிவாக்கத்தாலும் அதிகாரிகளின் அலட்சியத்தாலும் நட்டமடைந்து 30 ஆண்டிற்குள் மூடப்பட்டுவிட்டது. தமிழ்நாட்டில் புதிய அரசு பதவியேற்றதும் இந்த ஆலை குறித்து குழு அமைக்கப்பட்டு அதன் அறிகையை தாக்கல் செய்யவேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சரின் வேண்டுகோளுக்கு இணங்க விவசாயத்துறை அமைச்சர் அறிவித்தார். அதன்படி மத்திய மாநில அரசுகளின் அதிகாரிகள் 3 முறை வந்து ஆய்வுச்செய்து சென்றனர். இன்று மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி, சேத்தியாதோப்பு எம்ஆர்கே பன்னீர்செல்வம் கூட்டுறவு ஆலையின்மேலாண்மை இயக்குனர் சதீஷ், கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் முருகன், முன்னாள் எம்எல்ஏ குத்தாலம் கல்யாணம், முன்னாள் ஊராட்சிமன்ற தலைவர் மோகன்குமார், மணல்மேடு பேரூராட்சி தலைவர் அறிவு மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
மாவட்ட ஆட்சியர் ஆலையை பார்வையிட்டு விவசாயிகள் மற்றும் இயக்குனர்களிடம் ஆலோசை நடத்தினார். அதில் விவாதிக்கும்போது , தமிழக அரசு தலைஞாயிறு சர்க்கரை ஆலையை திறக்க முடிவெடுத்துவிட்டது என்றும் இந்த ஆலை இயங்கும்போது தேவையான கரும்பை விவசாயிகள் பயிரிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்,ஆலையின் அங்கத்தினர்களை அழைத்துப் பேசவேண்டும் என்றும் தற்பொழுது 2 ஆயிரம் ஏக்கரில் கரும்பு விவசாயம் செய்கின்றனர். தேவையான கரும்பை உற்பத்தி செய்யவேண்டும் என்றும் ஆலைஇயங்குவதில் தாமதம்ஏற்பட்டால் விவசாயிகளுக்கு நட்டமில்லாமல் அருகில் உள்ள ஆலைகளுக்கு கரும்பை அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். விவசாயிகள் அதனை ஏற்றுகொண்டனர், விரைவில் ஆலையின் அங்கத்தினர்களை அழைத்து கூட்டம் நடத்தப்படும் என்று முடிவெடுக்கப்பட்டது.