Skip to content
Home » பொங்கல் வரும் பின்னே….. கரும்பு வந்தது முன்னே

பொங்கல் வரும் பின்னே….. கரும்பு வந்தது முன்னே

தமிழர்களின் முக்கிய பண்டிகை  பொங்கல்.  தை மாதம் முதல் நாள் கொண்டாடப்படும் அறுவடை திருநாளான பொங்கல் பண்டிகை அன்று வீடுகளில் கோலமிட்டு, புதுப்பானைகளில் புதுஅரிசியை பொங்கலிட்டு உதயசூரியனுக்கு படையலிட்டு புத்தாடை அணிந்து மக்கள் கொண்டாடுவார்கள். பொங்கல் பண்டிகைக்காக மண் பானைகள், அடுப்புகள் தயாரிக்கும் பணி தஞ்சை மாவட்டத்தில் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

பொங்கல் பண்டிகையில் முக்கிய இடத்தை பிடிப்பது கரும்பு, மஞ்சள் கொத்து தான். அதிலும் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் மிகவும் விரும்புவது கரும்பை தான். தற்போது தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் பொங்கல் செங் கரும்பு  அறுவடை செய்யப்பட்டு ஆங்காங்கே விற்பனைக்கு வந்து விட்டது. எங்கு கரும்பு சாகுபடி செய்யப்பட்டாலும் காவிரி கரையோரம் சாகுபடி செய்யப் பட்டுள்ள கரும்புகளுக்கு  தனிச்சுவை உண்டு.

எனவே தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு காவிரி டெல்டாவில் இருந்து தான் கரும்புகள் சென்று கொண்டிருக்கிறது. தற்போது 5 அடி உயரத்துக்கு மேல் உள்ள தடித்த  ஒரு கரும்பு ரூ.50க்கு விற்பனை செய்யப்படுகிறது.  25 கரும்புகள் கொண்ட கட்டு ரூ.800 முதல் விற்பனை செய்யப்படுகிறது.  பொங்கல் நெருங்க நெருங்க விலை குறைய வாய்ப்பு உள்ளது.  வெல்லமும் ஆங்காங்கே தயார் செய்யப்பட்டு  விற்பனைக்கு வந்துள்ளது.  இன்னும் சில தினங்களில் கரும்பு, வெல்லம், புதுப்பானை, அடுப்பு விற்பனை களைகட்டத்  தொடங்கிவிடும்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!