திருச்சி மாவட்டம், திருவானைக்காவல் அருகே பனையபுரத்தில் உள்ள கல்லணை சாலையில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் செயல்பட்டு் வருகிறது.
நெல் கொள்முதல் நிலையத்திற்கென்று களம் மற்றும் கூடாரம் அமைக்காமல் சாலையிலேயே நெல்களை கொள்முதல் செய்து வந்தனர்.
இந்நிலையில் பனையபுரம், கிளிக்கூடு, உத்தமர் சிலி, திருவளர்ச்சோலை, கல்லனை, பொன்னுரங்கபுரம் உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கரில் நெல்கள் பயிரிடப்பட்டு தற்போது அறுவடை செய்து வருகின்றனர். அறுவடை செய்த நெல்லை
பனையபுரம் பகுதியில் உள்ள நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயிகள் விற்று வந்தனர். நெல்களை கொள்முதல் செய்த தமிழ்நாடு நுகர்வோர் வாணிபக் கழகம் நெல் மூட்டைகளை ஏற்றாமல் சாலையிலேயே ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகளை அடுக்கி வைத்துள்ளனர்.
இந்நிலையில் திருச்சி மாவட்டத்தில் தற்போது திடீர் மழை பெய்து வருவதால் சாலையில் அடுக்கி வைக்கப்பட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழைநீரில் நனைந்து படி உள்ளது. நெல் மூட்டைகளை நனையாமல் பாதுகாக்க போதுமான தார்பாய்கள் இல்லாததும் சரியான நேரத்திற்கு லாரிகள் வராதாலும் நெல் மூட்டைகள் மழையில் நனைந்தது. மழையில் நனையும் நெல் மூட்டைகளை அரசு என்ன செய்யப் போகிறது என விவசாயிகள் புலம்பி வருகின்றனர்.