தேசிய தொழில் நுட்பக் கழகத்தில் ‘அவசர கால உதவி மற்றும் பேரிடர் மேலாண்மை’ என்ற தலைப்பில் நடைபெற்று வரும் 3 நாள் சர்வதேச கருத்தரங்கில், திருச்சி ராணா மருத்துவமனை -தலைமை இருதய மருத்துவ நிபுணர் டாக்டர் செந்தில்குமார் கலந்து கொண்டு, மாரடைப்பு ஏற்பட்ட ஒருவருக்கு அவசர உதவி / முதலுதவி எப்படி அளிப்பது என்பதை செயல் விளக்கம் அளித்து காண்பித்தார்.
இதய அடைப்பு (மாரடைப்பு) ஏற்பட்டு மூச்சுயின்றி இருக்கும் ஒருவரின் உயிரை சிபிஆர் தொழில் நுட்பம் (CPR) என்று மருத்துவ துறையில் அழைக்கப்படும் முறையை கையாண்டு காப்பாற்றுவது என்பது பற்றி விளக்கியும், செயல் முறை செய்தும் காட்டிய. பின்னர் டாக்டர் செந்தில் குமார் கூறியதாவது: சிபிஆர் ஒரு உயிர் காக்கும் தொழில் நுட்பம் அனைத்து அவசர காலங்களிலும் உதவும். ஒருவருக்கு இதய அடைப்பு (மாரடைப்பு) ஏற்பட்டு மூச்சு நின்ற நிலையில் அவரது இதயத் தடிப்பு (அல்லது) சுவாசம் நின்று போயிருக்கக் கூடிய நிலையில், சிபிஆர் நுட்பத்தை தெரிந்தாலோ அல்லது அதை
பயன்படுத்த பயந்து கொண்டு சும்மா இருப்பதை காட்டிலும் ஒரு முயற்சி செய்து பார்க்கலாம். முயற்சிப்பது என்பது சும்மா இருப்பதைக் காட்டிலும் சிறந்தது. அது ஒரு உயிரை காப்பாற்ம் அரிய செயலாகும்.
சிபிஆர் என்பது மூளைக்கும் மற்றும் ஏனைய பகுதிகளுக்கும் ஆக்சிஜன் கலந்த ரத்த ஓட்டத்தை ஏற்படுத்துவது, இதயம் நின்று விட்டால் ஆக்சிஜன் கலந்த ரத்த ஓட்டம் உடலின் எந்தப் பகுதிக்கும் கிடைக்காது. நெஞ்சுப் பகுதியில் அழுத்தம் (Compression) கொடுக்கும் போது ரத்த ஒட்டத்தை ஏற்படுத்துவதாகும்.
இவ்வாறு அவர் பேசினார். கருத்தரங்கில் கலந்து கொண்டவர்களுக்கு செயல் முறை விளக்கம் செய்து காட்டினார். பார்வையாளர்கள் (தன்ஆர்வலர்கள்) எப்படி இதனை செய்வது என்பதை மருத்துவர் முன்னிலையில் செய்து காட்டினர். சிபிஆர் நுட்பத்தை முதலுதவியாக அளிக்கலாம். செயற்கை சுவாசக் கருவி இல்லாத வேளையில் உடனடித் தீர்வுக்கு உயிரை காப்பற்றக் கூடிய உயரிய நுட்பம் இது, மேலும் அவசர உதவிக்கு அவசர கால எண்களை அழைக்கலாம். அவசர கால ஆம்புலன்ஸ் வரும் நேரம் வரை காத்திராமல் நாமே சிபிஆர் நுட்பத்தை பயன்படுத்தி பாதிக்கப்பட்டவருக்கு உடனடி உதவி செய்யலாம் என தெரிவித்தார்.