ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த மணல் சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக். இவர் உலகின் ஒவ்வொரு நிகழ்வையும், ஒடிசா கடற்கரையில் மணல் சிற்பங்களாக வரைந்து உலகின் கவனத்தை ஈர்ப்பவர். இதற்காக இவர் பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளார்.இன்று சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அரசியல் கட்சி தலைவா்கள், முக்கிய பிரமுகா்கள் என பலரும் சர்வதேச மகளிர் தின வாழ்த்துகளை தொிவித்து வருகின்றனா். இந்நிலையில், சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு மணல் சிற்ப கலைஞா் சுதா்சன் பட்நாயக், பூரி கடற்கரையில் மணல் சிற்பம் வரைந்து மகளிர் தின வாழ்த்தை தொிவித்துள்ளாா். இந்த படத்தை இங்கே காணலாம்.
