Skip to content
Home » ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் கழுத்தை அறுத்துக்கொண்ட வாலிபர்…

ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் கழுத்தை அறுத்துக்கொண்ட வாலிபர்…

  • by Senthil

திருச்சி ஸ்ரீரங்கத்தை சேர்ந்த விஜய்(29) என்ற வாலிபர் மதுவுக்கு அடிமையானதால், அவரை அவருடைய மனைவி ஒரு தனியார் குடி போதை தடுப்பு மையத்தில் சிகிச்சைக்காக அனுமதித்திருந்தார். நேற்றுவரை அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர், திடீரென அந்த மையத்திலிருந்து தப்பினார். நேற்று இரவு ஸ்ரீரங்கம் பஞ்சக்கரை பகுதியில் இருசக்கர வாகனத்தை திருட முயன்ற போது ஸ்ரீரங்கம் காவல்துறையினர் விஜயை கைது செய்து காவல் நிலையத்துக்கு அழைத்து சென்றனர்.
இந்நிலையில் இன்று காலை காவல் நிலையத்தில் அவரிடம் விசாரணை நடத்திய போது கழிவறைக்கு சென்று விட்டு வருவதாக கூறிச்சென்றவர் ஜன்னல் கண்ணாடியை உடைத்து கழுத்தை அறுத்துக்கொண்டார். இதில் ரத்தம் சொட்ட சொட்ட அவரை மீட்ட காவல்துறையினர் ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகின்றனர். அவர் கழுத்தில் 30 தையல்கள் போடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுக்குறித்து உதவி ஆணையர் நிவேதா தலைமையில் விசாரணை நடந்து வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!