மயிலாடுதுறை அருகே செம்பனார்கோயில் வட்டாரம், காட்டுச்சேரி கிராமத்தில் உள்ள மாரியப்பா சீனிவாசா அரசு உதவிப்பெறும் தொடக்கப்பள்ளியில் தரமற்ற அரிசி பயன்படுத்தப்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் வீடியோ செய்தி வெளியானதை தொடர்ந்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அதில் 5 மாதத்திற்கு மேற்பட்ட அரிசியினை பாதுகாப்பற்ற இடத்தில் வைக்கப்பட்டுள்ளதால் அரசியின் நிறம் மாறியுள்ளதாகவும் ஆனால் இந்த மாதத்திற்கு வழங்கப்பட்ட அரிசியினை தான் மதிய உணவிற்காக பயன்படுத்தப்பட்டது வருவதாக நுகர்பொருள் வாணிப கழக முதுநிலை மண்டல மேலாளரால் உறுதி செய்யப்பட்டுள்ளது. பள்ளியின் தலைமையாசிரியர் மற்றும் சத்துணவு அமைப்பாளர் ஆகிய இருவருக்கும் உள்ள கருத்து வேறுபாடு காரணமாக இச்செய்தி வீடியோவாக சமுக வளைதளத்தில் வரப்பெற்றுள்ளது. இச்செய்தி உண்மைக்கு புறம்பானது என்றும் தெரியவருகிறது. இது தொடர்பாக மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலரால் மாரியப்பா சீனிவாசா அரசு உதவிப்பெறும் தொடக்கப்பள்ளியின் தலைமையாசிரியர் மற்றும் சத்துணவு அமைப்பாளர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் சத்துணவு அமைப்பாளர் பியூலா என்பவரை தற்காலிக பணி நீக்கம் செய்தும், சமையலர் சகாயமேரி என்பவரை பணியிட மாறுதல் செய்தும் கலெக்டர் மகாபாரதி உத்தரவிட்டுள்ளார்.
