Skip to content

மானியத்தில் கோழி குஞ்சுகள்… ஏழைப் பெண்கள் விண்ணப்பிக்க அழைப்பு…

  • by Authour

ஏழ்மை நிலையிலுள்ள, கணவனை இழந்த, கைவிடப்பட்ட (ம) ஆதரவற்ற பெண்களுக்கு நாட்டின கோழிக்குஞ்சுகள் (40 கோழிக்குஞ்சுகள் / ஒரு பயனாளி) 50% மானியத்தில் வழங்கும் திட்டம் என அரியலூர் விண்ணப்பிக்க அழைப்பு விடுத்துள்ளார்.

2024-25-ஆம் ஆண்டிற்கு அரியலூர் மாவட்டத்தில், “ஏழ்மை நிலையிலுள்ள, கணவனை இழந்த, கைவிடப்பட்ட (ம) ஆதரவற்ற பெண்களுக்கு நாட்டின கோழிக்குஞ்சுகள் (40 கோழிக்குஞ்சுகள் / ஒரு பயனாளி) 50% மானியத்தில் வழங்கும் திட்டம்” செயல்படுத்தப்பட உள்ளது.

இத்திட்டத்தின் கீழ், கோழி வளர்ப்பில் ஆர்வமுள்ள ஏழ்மை நிலையிலுள்ள பெண்களுக்கு, 40 கோழிக்குஞ்சுகள் வாங்குவதற்கான மொத்த செலவில் 50 சதவீதம் மானியமாக ரூ.1,600/- வழங்கப்பட உள்ளது. இத்திட்டத்தின் மீதமுள்ள 50 சதவீதம் பங்களிப்பு ரூ.1,600/- பயனாளி வழங்க வேண்டும்.

இத்திட்டத்திற்கான பயனாளிகளின் தகுதி அளவுகோல்கள்:

1. தேர்ந்தெடுக்கப்படும் பயனாளி ஏழைப்பெண்ணாக இருக்க வேண்டும். விதவைகள், ஆதரவற்றோர் மற்றும் உடல் ஊனமுற்றோருக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

2. தேர்ந்தெடுக்கப்படும் பயனாளி தொடர்புடைய கிராமத்தில் நிரந்தரமாக வசிப்பவராககவும், கோழி வளர்ப்பில் ஆர்வம் கொண்டவராகவும் இருத்தல் வேண்டும்.

3. பயனாளி தனது சொந்த செலவில் (ரூ.3200/- செலவில்) கோழிக்குஞ்சுகள் கொள்முதல் செய்திட திறன் பெற்றவராக இருக்க வேண்டும். சுய சான்று ரசீது சமர்பிக்கப்பட்டவுடன், 50 சதவீதம் மானியம் (ரூ.1600/-) வங்கி கணக்கில் செலுத்தப்படும்.

4. தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தில் பதிவு செய்யப்பட்ட சுய உதவி குழுக்களைச் சேர்ந்த பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

5. பயனாளி, முந்தைய ஆண்டுகளில் செயல்படுத்தப்பட்ட இலவச கறவை மாடு, வெள்ளாடு/செம்மறியாடு திட்டம் மற்றும் கோழிப்பண்ணை திட்டங்களில் பயனடைந்தவராக இருத்தல் கூடாது.

6. தேர்வு செய்யப்படும் மொத்த பயனாளிகளில் 30% பேர் ஆதிதிராவிடர் / பழங்குடியின வகுப்பைச் சேர்ந்தவராக இருப்பர்.

எனவே, இத்திட்டத்தில் சேர விருப்பமுள்ள பெண்கள் தங்கள் கிராமத்திற்கு அருகில் உள்ள அரசு கால்நடை மருந்தகத்தை அணுகி விண்ணப்பம் பெற்று, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை உரிய ஆவணங்களுடன் தொடர்புடைய கால்நடை மருந்தகத்தில் உடன் ஒப்படைத்திட வேண்டுமென அரியலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!