பிரான்ஸ் தலைநகர் பாரிசில் ஒலிம்பிக் போட்டி நடந்தது. இதில் திருச்சி திருவெறும்பூரைச் சேர்ந்த தடகள வீராங்கனை சுபா வெங்கடேசனும் 400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் இந்தியா சார்பில் பங்கேற்றார். போட்டியில் அவர் வெற்றி வாய்ப்பை இழந்தார். எளிமையான குடும்பத்தில் பிறந்த சுபா வெங்கடேசன், தனது தொடர் முயற்சியால் இந்த அளவிற்கு உயர்ந்துள்ளார்.
இந்த முறை அவர் பதக்கம் பெற இயலாமல் போனாலும்
இந்தியாவிற்கு, தமிழகத்திற்கும் குறிப்பாக திருச்சி மாவட்டத்திற்கும் பெருமை சேர்க்கும் வகையில் அவர் தனது பங்களிப்பை வெளிப்படுத்தி தாயகம் திரும்பினார். அவர் நேற்று விமானம் மூலம் திருச்சி வந்தார். அவரை திருச்சி மாவட்ட தடகள சங்கம், மக்கள் சக்தி இயக்கம் மற்றும் திருச்சி மாவட்ட பொதுமக்கள் சார்பாக வாழ்த்தி வரவேற்றனர்.