நடிகர் கார்த்தி நடிப்பில் தற்போது சர்தார் 2 படப்பிடிப்பு நடந்து வருகிறது. இதன் படப்பிடிப்பு சென்னை சாலிகிராமம் அருகே பிரசாத் ஸ்டூடியோவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. படப்பிடிப்பின்போது எந்த வித உபகரணங்களும் இன்றி சண்டை பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த சண்டை பயிற்சியாளர் ஏழுமலை(38), இருபது அடி உயரத்தில் இருந்து தவறி குப்புற விழுந்தார். அப்போது அவரது மார்பு பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டு நுரையீரல்கள் பாதிக்கப்பட்டு ரத்தகசிவு ஏற்பட்டது. உடனடியாக அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இது குறித்து விருகம்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.