புத்தாக்க கண்டுபிடிப்புகளுக்கு மாதிரி வடிவம் உருவாக்கும் போட்டி: தூய்மை பணியாளர்கள் கழிவுநீர் வடிகால் இறங்கி குப்பை அல்லும் முறையை மாற்ற இயந்திரம், உள்ளிட்ட பல்வேறு கண்டுபிடிப்புகளை கண்டுபிடித்து அசத்திய பள்ளி மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கி பாராட்டு.
தமிழ்நாடு அரசின் பள்ளி புத்தாக்க மேம்பாட்டு திட்டம் கடந்த 2022ம் ஆண்டு தொடங்கப்பட்டது அதில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் உள்ள மாணவர்களின் புத்தாக்க சிந்தனைகளை ஊக்குவிப்பதோடு அவர்களின் பிரச்சனைகளை தீர்க்கும் பண்புகளும் வளர்க்கப்படுகின்றன.
இந்த ஆண்டு பள்ளிபுத்தாக்க மேம்பாட்டு திட்டத்தில் தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் இருந்து சுமார் 46,189 புத்தாக்க சிந்தனைகள் பெறப்பட்டன. அவை நான்கு கட்டங்களாக தேர்வு செய்யப்பட்டு, தேர்வு செய்யப்பட்ட புத்தாக்க சிந்தனைகளுக்கு செயல் வடிவம் தரும் முகாம் ஜனவரி 27 முதல் பிப்ரவரி 1ம் தேதி வரை தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் நடைபெற்று வருகிறது. கரூர்
மாவட்டத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 16 பள்ளிகளைச் சார்ந்த 21 அணிகளுக்கு கரூர் அருகே புத்தாம்பூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் இரண்டு நாட்கள் இம்முகாம் நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவன இயக்குனர் அம்பலவாணன் IAS., கலந்து கொண்டு மாணவர்களின் புத்தாக்க கண்டுபிடிப்புகளை பார்வையிட்டார்.
குறிப்பாக மாணவர்கள் பிளாஸ்டிக் பாட்டில்களை கழிவுநீரில் போட்டு விடுவதால் தூய்மை பணியாளர்கள் மிகவும் சிரமப்பட்டு பணி செய்வதால் அதை எளிமையாக்கும் வகையில் கண்டுபிடிப்புகளை மாணவர்கள் விளக்கப்படுத்தினர், சாலையில் வீசப்படும் பிளாஸ்டிக் கால் கால்நடைகள் பாதிக்கப்படுவதால் அதனை எளிமைப்படுத்தும் வகையில் கண்டுபிடிப்புகள் உள்ளிட்டா பல்வேறு கண்டுபிடிப்புகளை மாணவர்கள் காட்சிப்படுத்த அசத்தினார். பின்னர் முகாமின் நிறைவு விழாவில் கலந்து கொண்ட அனைத்து மாணவ, மாணவியர்கள், வழிகாட்டி ஆசிரியர்கள், பயிற்றுநர்கள் மற்றும் நடுவர்கள் அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கி பாராட்ட தெரிவித்தனர்.