திருச்சி மாநகர், பீம நகரில் இயங்கி வரும் மாநகராட்சி நடுநிலைபள்ளியில் 6 ஆம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு கல்வி திறனை மேம்படுத்த தனியார் தொண்டு நிறுவனத்துடன் சேர்ந்து ரோபோடிக் பயிற்சி வகுப்பு இன்று முதல் தொடங்கபட்டது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட கல்வி அலுவலர் பேபி, மற்றும் பள்ளியின் தலைமை ஆசிரியர், மாவட்ட கல்விதுறை அதிகாரிகள் கலந்துகொண்டனர். இதனை தொடர்ந்து மாவட்ட கல்வி அலுவலர் பேபி , மாணவர்கள் மத்தியில் பேசும் போது.. கடந்த காலங்களை விட தற்போது நவீன காலமாக மாறி வருகிறது. ஸ்மார்ட் உலகமாக வேகமாக வளர்ந்து வருகிறது. ஆகையால் மாணவர்கள் டெக்னாலஜியை கர்றுக்கொள்ள வேண்டும். ரோபோடிக் இயந்திரத்தை பற்றி அனைவரும் நடிகர் ரஜினி நடித்துள்ள இயந்திரன் படம் மூலம் அறிந்து இருப்போம், ஆனால் அதில் ரோபோ என்ன ப்ரோக்ராம் செய்யபட்டதோ அதை மட்டும் தான் செய்யும். குறிப்பாக ரோபோ இயந்திரம் மூலம் நல்லதும் இருக்கு, கெட்டதும் இருக்கும் போல் தான் படத்தை எடுத்து இருப்பார்கள். ஆனால் மாணவர்கள்
கல்விதிறனை வளர்த்துக்கொண்டு சமூதாயத்திற்கு நல்லதை மட்டும் செய்யும் ரோபோ இயந்திரங்களை மட்டும் தயாரிக்க வேண்டும். மாணவர்கள் அனைவரும் நாட்டின் சிறந்த விஞ்ஞானியாக ஆகவேண்டும் என்றார்.
இதனை தொடர்ந்து மாணவ, மாணவிகள் மத்தியில் ரோபா இயந்திரம் எப்படி செயல்படும் என்று செய்முறை செய்து காட்டபட்டது. அதில் ரோபோ இயந்திரம் யோகசனம், நடனம் செய்தது இதை கண்ட மாணவர்கள் உற்சாகமாக கண்டுகளித்தனர். மேலும் மாவட்ட கல்விதுறை அதிகாரிகள் செய்தியாளர்களிடம் கூறும் போது. முதல்கட்டமாக இந்த அரசு பள்ளியில் தொடங்கியுள்ளோம். விரைவில் மற்ற பள்ளிகளில் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர். மேலும் இதுபோன்ற பயிற்ச்சி மாணவர்களின் அறிவு திறனை மேம்படுத்தும், சிறந்த மாணவர்களை உருவாக்க முடியும் என்றனர்.