போதை பொருள்ள ஒழிப்பில் தமிழக அரசும், காவல் துறையும் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. குறிப்பாக மாணவர்கள் மத்தியில் போதை பொருள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவதிலும் காவல்துறையினர் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறார்கள். பேரணி மற்றும் கருத்தரங்கங்கள் மூலம் போதை பொருளுக்கு எதிரான பிரசாரங்கள் செய்யப்பட்டு வருகிறது.
அந்த வகையில் திருச்சி மரக்கடை அரசு சையது முர்துஷா மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்ட போதை பொருள் விழிப்புணர் பேரணி இன்று நடைபெற்றது. பேரணியை காந்தி மார்க்கெட் காவல் நிலைய ஆய்வாளர் சுகுமாறன் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.
போதை பொருளுக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகள் ஏந்தி, போதையினால் ஏற்படும் தீங்குகளை விளக்கும் வண்ணம் கோஷங்களை எழுப்பியவாறு பேரணியாக சென்றனர்.