பொள்ளாச்சி அருகே உள்ள புளியம்பட்டி பகுதியில் தனியார் கல்லூரி உள்ளது. இந்த கல்லூரிக்குள் பள்ளியும் உள்ளது. இந்தக் கல்லூரி பொள்ளாச்சி பல்லடம் செல்லும் சாலையில் அமைந்துள்ளது. இந்த சாலையில் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருவதால் இதுகுறித்து பள்ளி சார்பில் கல்லூரி முன்பு வேகத்தடை அமைக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். இதுவரை கல்லூரி முன்பு வேகத்தடை அமைக்கப்படாமல் இருப்பதால் தொடர்ந்து விபத்து ஏற்பட்டு வருவதாக கூறி இன்று காலை தனியார் கல்லூரி மாணவர்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் அனைவரும் பொள்ளாச்சி பல்லடம் சாலையில் பள்ளி ஆசிரியர்கள் பள்ளி மாணவர்கள் அனைவரும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்தது சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பள்ளி ஆசிரியர்களிடம் பேச்சுவாத்தை நடத்திய பின்னர் மாணவர்கள் சாலைமறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். மேலும் தொடர்ந்து போலீசார் பள்ளி நிர்வாகத்தினரிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த மாணவர்களின் பெற்றோர்கள் மாணவர்களை பள்ளிக்கு படிக்க அனுப்பி வைத்தால் போராட்டத்தில் ஈடுபடுத்துவது என்ன நியாயம் என்று வாக்குவாத்தில ஈடுபட்டனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதி சிறிது நேரம் பரபரப்புகுள்ளானது.