தஞ்சை மாவட்டம், கும்பகோணம் ஜோதிமலை இறைபணி திருக் கூட்டத்தின் சமய, சமூகப் பணிகள் தொகுத்து நூல் வெளியீடு நடைப் பெற்றது. கும்பகோணத்தில் நடைப் பெற்ற நிகழ்ச்சியில் கும்பகோணம், ஜோதிமலை இறைப் பணி திருக் கூட்ட நிறுவனர் தவத்திரு திருவடிக்குடில் சுவாமிகள் நூலை வெளியிட, திருக்கூட்டம் ஒருங்கிணைப்பாளர்கள் சிவகுமார், ஐயப்பன் பெற்றுக் கொண்டனர். இதில் திருக் கூட்டம் மூலம்
சரஸ்வதி பூஜையை முன்னிட்டு ஆண்டுதோறும் பள்ளி மாணவ, மாணவியருக்கான சமய, சமூக முன்னேற்ற அடிப்படையிலான தனித் திறன் வளர்ப்பு போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி 16 ம் ஆண்டாக வருகிற 15 ந் தேதி போட்டிகளை நடத்தி, 24 தேதி செவ்வாய்க்கிழமை விஜயதசமி அன்று பரிசளிப்பு விழா நடத்துவது என்று தீர்மானிக்கப் பட்டது.