புதுக்கோட்டை சந்தை பேட்டை நகராட்சி நடுநிலைப் பள்ளியில் படிக்கும் 7ம்வகுப்பு படிக்கும் மாணவன் ரிபாத் இவரது தந்தை நிஜாம் மொய்தீன் இவர் சமீபத்தில் உயிரிழந்தார். இவரது தாய் ஷகிலாபானு வாழ்வாதாரத்திற்கு உதவிடும் வகையில் இன்று பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் க.நைனாமுகம்மது அவரது சொந்த
செலவில் தையல்மிஷின் ஒன்றை ஷகிலாபானுக்கு வழங்கினார். இந்நிகழ்வில் தலைமை ஆசிரியர் விஜயமாணிக்கம் மற்றும் ஆசிரியர் கள், மாணவர்கள் பங்கேற்றனர்.