கரூர்- வாங்கல் சாலையில் உள்ள எல்லைமேடு பகுதியில் செயல்படும் தனியார் பள்ளி மைதானத்தில், கரூர் ஹார்ஸ் ரைடர்ஸ் ஸ்கூல் நடத்திய மண்டல அளவிலான குதிரை ஏற்ற போட்டியில் நாமக்கல், கரூர், திருச்சி மாவட்டங்களை சேர்ந்த பள்ளி மாணவ, மாணவியர் மற்றும் சுமார் 100 பேர் பங்கேற்றனர்.
இந்த போட்டி நான்கு பிரிவுகளாக நடைபெற்றது. இதில், குதிரை ஏற்றத்தில் நடை போட்டி, மித வேகமாக குதிரை செலுத்தும் போட்டி, வேகமாக குதிரையை செலுத்தும் போட்டி மற்றும் அதிவேகமாக குதிரையை செலுத்தும் போட்டி நடைபெற்றது. போட்டியில் பள்ளி மாணவ மாணவியர் குதிரையை திறம்பட செலுத்தும் அடிப்படையில் மதிப்பெண்
வழங்கப்பட்டு தேர்வு செய்யப்படுவார்கள். இப்போட்டியில் பங்கேற்ற மாணவ-மாணவியர் போட்டியில் வெல்லும் முனைப்போடு சுட்டி சிறுவர் முதல் பெரியவர் வரை உற்சாகத்துடன் ஈடுபட்டனர்.
குதிரை ஏற்ற பயிற்சியினால் தற்போது உள்ள தலைமுறையினர் வலிமையானவர்களாகவும், தைரியம் மிக்கவர்களாக உருவாக்க முடியும். குறிப்பாக ஆட்டிசம் குறைபாடுள்ள குழந்தைகள் மீள முடியும் என ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளதாக பயிற்சியாளர் சிவக்குமார் தெரிவித்தார். போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட உள்ளது.