திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள கலையரங்கில் Mansa calligraphy, Handwriting champ – 2023 மாணவர்களுக்கான ஹேண்ட் ரைட்டிங் சிறப்பு போட்டி நடத்தப்பட்டது.
இதில் திருச்சி மாவட்ட இருக்க கூடிய 20க்கும் மேற்பட்ட பள்ளிகளை சேர்ந்த 1000 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
இந்த போட்டியில் வெற்றி பெற்ற 150 பேருக்கு பரிசுகள், விருதுகள் வழங்கபட்டது.
இந்த நிகழ்ச்சியில் சிறப்பு
விருந்தினராக தமிழ்நாடு பள்ளிகல்வி துறை அமைச்சர் அன்பின் மகேஷ் கலந்து கொண்டு மாணவர்களை வாழ்த்தினார்.
இதனைத் தொடர்ந்து மேடையில் பேசிய பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியது…
மாணவர்கள் கையெழுத்தை திருத்தமாகவும், தெளிவாகவும் எழுத கற்றுக் கொள்ள இதுபோன்ற புதிய முயற்சியை எடுத்தவருக்கு முதலில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும் இந்த போட்டியில் பங்கேற்ற அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.
அடுத்த ஆண்டு இந்த போட்டியில் தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசு பள்ளி மாணவ , மாணவிகள் பங்கேற்பார்கள் என உறுதியளிக்கிறேன்.