திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த ஆவாரங்குப்பம் அரசு நடுநிலைப் பள்ளியில் கடந்த 15ம் தேதி பள்ளி வளாகத்தையும், ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட நீர் தேக்க தொட்டியையும், மேல்நிலை நீர் தேக்கத் தொட்டியையும் மாணவர்கள் துடைப்பத்தை வைத்து சுத்தம் செய்யும் வீடியோ வெளியாகி இருந்தது.
ஆபத்தான முறையில் மேல் நீர்த்தேக்க தொட்டியை மாணவர்கள் ஏறி சுத்தம் செய்யக்கூடிய காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
படிக்க வரும் மாணவர்கள் கையில் துடைப்பத்தை கொடுத்து சுத்தம் செய்ய வைக்கும் ஆசிரியர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இதைத்தொடர்ந்து பள்ளி தலைமை ஆசிரியர் உமாராணி என்பவரை மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் மலைவாசன் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டு உள்ளார்.