Skip to content

மாணவர்கள் வாயில் டேப் ஒட்டியது ஆசிரியரா? போட்டோ வெளியிட்டது யார்?

  • by Authour

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றமக்கள் குறைதீர் கூட்டத்தில், ஒரத்தநாடு அருகே உள்ள அய்யம்பட்டி கிராம மக்கள் அளித்த மனுவில் கூறியிருந்ததாவது:

இதுகுறித்து மாவட்ட தொடக்ககல்வி அலுவலர் மதியழகன் கூறியது: அக்.21-ம் தேதியன்று அந்த வகுப்பில் ஆசிரியர் இல்லாததால், ஒரு மாணவரை வகுப்பறையை கவனித்துக் கொள்ளும்படி கூறியுள்ளனர். அந்த மாணவர்தான், வகுப்பறையில் பேசிய மாணவர்களின் வாயில் ‘டேப்’ ஒட்டியுள்ளார். ஆசிரியர்கள் யாரும் ஒட்டவில்லை. இதுகுறித்து விசாரித்து அறிக்கை தர வட்டார கல்வி அலுவலருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்றார்.

இதுகுறித்து பள்ளி தலைமையாசிரியை புனிதாவிடம் கேட்டபோது, ‘‘வகுப்பில் யாரும் பேசக் கூடாது என்பதற்காக வாயில் ‘செல்லோ டேப்’ ஒட்டியுள்ளனர். பின்னர், அந்த வகுப்புக்கு நான் சென்ற போது, ஒரு மாணவரின் வாயில் மட்டும் ‘டேப்’ ஒட்டப்பட்டிருந்தது. நான் அதை உடனடியாக அகற்றச் சொல்லிவிட்டேன். மாணவர்கள் வாயில் ‘டேப்’ ஒட்டப்பட்டிருந்ததை புகைப்படம் எடுத்தது யார் எனத் தெரியவில்லை. என்னிடமும், மாணவர்களிட மும் வட்டார கல்வி அலுவலர் விசாரணை நடத்தினார். அவரிடம் எனது விளக்கத்தை தெரிவித்துள்ளேன்’’ என்றார்.

இதற்கிடையே அந்த பள்ளியில் ஆசிரியர்களுக்கு இடையே உள்ள கோஷ்டி பூசல் காரணமாக  ஒரு ஆசிரியை தான் இதை படம் பிடித்து வெளியிட்டதாகவும் கூறப்படுகிறது.  ஆசிரியர் தான் வாயில் டேப் போட்டதாகவும் அந்த பகுதியில் பேசப்படுகிறது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!