பிரதமர் மோடி நேற்று மாலை கோவையில் தேர்தல் பிரசாரம் செய்தார். இதற்காக அவர் முக்கிய வீதிகளில் திறந்த காரில் சென்றார். அவர் செல்லும் வழி நெடுக மக்கள் திரண்டு நின்றிருந்தனர். அப்போது கோவை யை சேர்ந்த உதவிபெறும் பள்ளி மாணவர்களும் இந்த பேரணிைக்கு பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் வந்திருந்தனர். தேர்தல் பிரசாரத்தில் மாணவர்களை பயன்படுத்தக்கூடாது என விதி உள்ளது. இந்த நிலையில் தேர்தல் பிரசார நிகழ்ச்சிக்கு பள்ளி மாணவர்கள் எப்படி வந்தார்கள் என அனைத்து கட்சித்தலைவர்களும் விசாரித்தனர். இதற்கு பள்ளி நிர்வாகமும் துணை போனதாக தெரியவந்தது. இதுபற்றி திமுக கூட்டணி கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இது குறித்து தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவுக்கும் புகார் அளித்தனர்.
இதுகுறித்து இன்று சத்யபிரதா சாகுவிடம் நிருபர்கள் கேட்டனர். அதற்கு அவர், இது குறித்து கோவை மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. அவரது விளக்கம் வந்ததும் டில்லி தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பி வைக்கப்படும் என்றார்.