Skip to content
Home » 2 ஆசிரியர்கள் சஸ்பெண்டை ரத்து செய்ய கோரி மாணவர்கள் மறியல்..

2 ஆசிரியர்கள் சஸ்பெண்டை ரத்து செய்ய கோரி மாணவர்கள் மறியல்..

திருவள்ளூர் மாவட்டம் செவ்வாய்பேட்டை பகுதியில் ஆதிதிராவிடர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் பணியாற்றி வரும் கணிதம் மற்றும் அறிவியல் ஆசிரியர்களான பிரேம்குமார் மற்றும் ஜெகதீசன் ஆகியோர் மாணவிகளிடையே தவறாக நடந்து கொண்டதாக புகார் எழுந்தது. இதுகுறித்து குழந்தைகள் நல ஆணையம் பள்ளியில் ஆய்வு மேற்கொண்டது. புகார் குறித்து பள்ளியில் மாணவிகளிடம் கேட்டறிந்த போது கணிதம் மற்றும் அறிவியல் ஆசிரியர்கள் தவறாக நடந்து கொள்வதாக சில மாணவிகள் தெரிவித்திருந்தனர். இதனடிப்படையில் இரு ஆசிரியர்களும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

இந்நிலையில் ஆசிரியர்கள் பிரேம் குமார் மற்றும் ஜெகதீசன் ஆகியோர் இப்பள்ளியில் சுமார் 20 ஆண்டுகளாக பணியாற்றி வருகின்றனர். இதுபோன்ற குற்றசாட்டுகள் எதுவும் எழுந்ததில்லை. எனவே இருவரையும் உடனடியாக பணிக்கு திரும்ப எடுக்க வேண்டும் என கோரி  பள்ளி மாணவர்கள் மற்றும் பெற்றோர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மாணவிகளில் சாலை மறியல் போராட்டத்தால் ஆவடி – திருவள்ளூர் நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!