அரியலூர் மாவட்ட பொது சுகாதார துறையின் சார்பில் கீழப்பலூர் அரசு பாலிடெக்னிக் கல்லூரி மாணவ மாணவிகளுக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. அரியலூர் மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் மருத்துவர் அஜிதா மற்றும் வட்டார மருத்துவ அலுவலர் மணிவண்ணன் அவர்களுடைய அறிவுறுத்தலின்படி, இம்மருத்துவ முகாம் நடைபெற்றது. கீழப்பழூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் அருண்குமார் அவர்கள் தலைமையிலான மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்தனர். வட்டார மருத்துவ சுகாதார மேற்பார்வையாளர் வகீல் மாணவ மாணவிகளுக்கு போதைப்பொருள் விழிப்புணர்வு மற்றும் டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு வழங்கினார். கல்லூரி முதல்வர் தமிழரசு அவர்கள் முகாமினை துவக்கி வைத்தார். துணை முதல்வர் அப்பூதி அடிகள் மற்றும் ஒருங்கிணைப்பாளர் மணிவண்ணன், பயிற்றுநர்கள் மற்றும் பணியாளர்கள் முகாமில் கலந்து கொண்டனர். மாணவ மாணவிகளுக்கு யோகா பயிற்றுநர்கள் புவனேஸ்வரி மற்றும் ஜெய்சங்கர் ஆகியோர் யோகா பயிற்சி வழங்கினார்கள். இம்முகாமில் 358 மாணவ மாணவியர்களை பரிசோதித்து சிகிச்சை வழங்கினார்கள். ரத்த அழுத்தம் இரும்புச்சத்து குறைபாடு தொடர்பாக பரிசோதனைகள் செய்யப்பட்டத. 124 பேருக்கு ரத்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. முகாமில் கலந்து கொண்ட அனைவருக்கும் நிலவேம்பு குடிநீர் மற்றும் கபசுர குடிநீர் வழங்கப்பட்டது. முகாம் ஏற்பாடுகளை சுகாதார ஆய்வாளர்கள் நரேந்திரன் மற்றும் எசக்கியல் விவின் மேற்கொண்டனர்.