கரூர் மாவட்டம் வடிவேல் நகரை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகன் அஜய் (17) நாமக்கல் அடுத்த கூலிப்பட்டி பகுதியில் உள்ள சைத்தான்யா என்ற தனியார் பள்ளியில் +2 படித்து வந்தார். பள்ளி விடுதியில் தங்கி படித்து வந்த இவர், நேற்று மாலை வழக்கம்போல வகுப்பு முடிந்ததும் விடுதிக்கு சென்று உள்ளார். மாலை 6 மணியளவில் விடுதியின் 2 வது மாடிக்கு சென்று அங்கிருந்து திடீரென கீழே குதித்துள்ளார். இதில் தலையில் படுகாயம் அடைந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு நாமக்கல்லில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை க்கா சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். சிகிச்சை பலனின்றி நேற்று இரவு மாணவன் அஜய் உயிரிழந்துள்ளான். இது தொடர்பாக நாமக்கல் நகர போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்…