Skip to content
Home » திருச்சி அருகே மாணவி விஷம் குடித்து தற்கொலை….

திருச்சி அருகே மாணவி விஷம் குடித்து தற்கொலை….

திருச்சி மாவட்டம், சிறுகனூர் அருகே உள்ள நெய் குளம் தெற்கு தெரு பகுதியைச் சேர்ந்தவர் தர்மராஜ் .இவரது மகள் கிருஷ்ணவேணி (18 ). இவர் பெரம்பலூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பிகாம் முதலாம் ஆண்டு படித்து வந்தார். கடந்த வாரம் கல்லூரி நிர்வாகம் செமஸ்டர் தேர்வு கட்டணம் செலுத்த கேட்டுள்ளது. இதையடுத்து கிருஷ்ணவேணி தனது தந்தையிடம் பணம் கேட்டார். ஆனால் கட்டணம் செலுத்த தாமதமானது. தனது தோழிகள் கட்டணம் செலுத்தி விட்ட நிலையில் தன்னால் கட்டணம் செலுத்த இயலவில்லையே என மன உளைச்சலில் இருந்துள்ளார்.

இது தொடர்பாக தாய் தந்தை 2 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த கிருஷ்ணவேணி  கடந்த 19ம் தேதி எலி மருந்தை எடுத்து குடித்து விட்டார். பின்னர் உயிருக்கு ஆபத்தான நிலையில் பெரம்பலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்துள்ளனர்.  அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருந்தபோதிலும் சிகிச்சை பலனின்றி கிருஷ்ணவேணி பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் தந்தை தர்மராஜ் சிறகனூர் போலீசில் புகார் அிளத்தார். இப்புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை  செய்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!