மயிலாடுதுறை அருகே சித்தர்காடு பகுதியில் பொதுமக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் நவீன அரிசி ஆலையை 2010ல் உயர்நீதிமன்றம் மூட சொல்லியதன்பேரில் மூடப்பட்ட ஆலை 2017முதல் மீண்டும் இயங்கி வருகிறது.
நீதிமன்றம் உத்தரவிட்டும் மூடப்படாமல் இயங்கி வரும் ஆலையை உடனடியாக மூடக்கோரியும், நடவடிக்கை எடுக்காத மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தை கண்டித்தும், ஆலை பாதிப்பால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்க தீர்வு கிடைக்கும் வரை பொதுமக்கள் சித்தர் காடு சுடுகாட்டில் 100க்கும் மேற்பட்டோர் குடியேறி உண்டு உறங்கும் தொடர் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக முதுநிலை மண்டல மேலாளர் சதீஷ் தலைமையில் அதிகாரிகள் சுடுகாடு கருமாதி மண்டபத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட பொது மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.