தமிழகத்தை அதிர வைத்த மேன்டூஸ் புயல் கடந்த 10ம் தேதி அதிகாலை கரையைக் கடந்தும் இன்னமும் அதன் பாதிப்புகள் குறையாத நிலையில், வங்கக்கடலில் அடுத்த புயல் டிசம்பர் 13-ஆம் தேதி மையம்கொள்ள வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் ‘தெற்கு அந்தமான் கடல் பகுதியில் டிச.13ம் தேதி வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. டிச.13 மற்றும் 14-ஆம் தேதிகளில் அந்த மேலடுக்கு சுழற்சி தீவிரமடைந்து குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறவும், அதற்கு மேலும் வலுப்பெறவும் வாய்ப்பு உள்ளது’ என தெரிவித்துள்ளது.இது தொடர்பாக தனியார் வானிலை ஆய்வாளர்கள் தெரிவிக்கையில், ‘அந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தீவிரமடைந்து புயலாக மாறவும் வாய்ப்பு இருக்கிறது. புதிய புயல் டிச.17, 18 மற்றும் 19 ஆகிய தேதிகளில், தமிழகம் மற்றும் புதுச்சேரியை நெருங்கும். இதனால் தமிழகத்திற்கு அதிக மழைப்பொழிவு சாத்தியமாகும்’ என்று தெரிவித்துள்ளனர். அப்படி வங்கக் கடலில் உருவாகும் அடுத்த புயலுக்கு ‘மொக்கா’ என பெயர் சூட்டப்பட்டுள்ளது. அந்த மொக்கா, பக்காவாக வலுபெறுமா, அல்லது வலுவிழந்து மொக்கையாகுமா என்பதை பொறுத்திருந்துான் பாக்க வேண்டும்.