மாண்டஸ் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுற்றுலாத்தலமான தரங்கம்பாடியில் உயர் மின்கோபுர விளக்குகள் பாதுகாப்பாக அப்புறப்படுத்தப்பட்டன:-வங்க கடலில் உருவாகியுள்ள மாண்டஸ் புயல் காரணமாக கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது மயிலாடுதுறை மாவட்டத்தில் 27 மீனவர் கிராமங்களை சேர்ந்த 340 விசைப்படகுகள் 3400 நாட்டுப் படகுகள் கடலுக்குள் செல்லவில்லை இதனால்14500 மீனவர்கள் 12700 மீன்பிடி தொழிலை சார்ந்தவர்கள் முடங்கியுள்ளனர். படகுகளை பாதுகாப்பாக கரைகளில் நிறுத்தி வைத்துள்ளனர். மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்குள் மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் என்று தரங்கம்பாடி பூம்புகார் வானகிரி திருமுல்லைவாசல் பழையாறு உள்ளிட்ட மீனவ கிராமங்களில் மீன்வளத்துறை சார்பில்
வாகனங்களில் ஒலிபெருக்கி வைத்து எச்சரிக்கை செய்யப்பட்டு வருகின்றனர். 8ஆம் தேதி முதல் 10ம் தேதி வரை கன மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மயிலாடுதுறை நாகப்பட்டினம் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு ஒன்பதாம் தேதி மிக கனமழைக்கான ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. தரையில் இருந்து கடலை நோக்கி 60 கிலோ மீட்டர் வரையிலான காற்று வீசும் என்று வானிலை ஆய்வு துறை அறிவித்துள்ள நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன அதன் ஒரு பகுதியாக புகழ் பெற்ற சுற்றுலா பகுதியான தரங்கம்பாடி கோட்டை பகுதியில் உயர் மின் கோபுரங்களிலிருந்து விளக்குகளை தரங்கம்பாடி பேரூராட்சி ஊழியர்கள் பாதுகாப்பாக அப்புறப்படுத்தினர். மேலும் பொதுமக்கள் கடற்கரைக்கு நாளை முதல் வர வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளனர்.