அரசு போக்குவரத்துகழகத்தை சேர்ந்த சில தொழிற்சங்கத்தினர் 6 அம்ச கோரிக்கை வலியுறுத்தி 2 நாட்களாக வேலை நிறுத்தம் செய்து வருகிறார்கள். இந்த வேலை நிறுத்தத்தை தடை செய்ய வேண்டும் என வழக்கறிஞர் மதுரை ஐகோர்ட் கிளையில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நேற்று காலை விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், வழக்கை 10ம் தேதிக்கு,(இன்று) தள்ளிவைக்கும்படி கூறினார்.
அதன்படி தள்ளிவைக்கப்பட்ட வழக்கு இன்று தலைமை நீதிபதி அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், வேலை நிறுத்தம் செய்ய உரிமை இல்லை என்று சொல்லவில்லை. முக்கியமான பண்டிகையான பொங்கல் நெருங்கும் நேரத்தில் ஸ்டிரைக் செய்வது அவசியமா என கேட்கிறோம். வேலை நிறுத்தத்தால் பொதுமக்கள் பாதிக்கப்படுகிறார்கள். அரசும், தொழிற்சங்கமும் ஏன் இதில் பிடிவாதமாக இருக்கிறீர்கள்.?
ஜனவரி மாத பணபலன்களை உடனே வழங்க முடியுமா, ஓய்வூதியர்களுக்கு மட்டும் ஜனவரி மாதத்திற்கான அகவிலைப்படி உயர்வு வழங்குவது குறித்து இன்று நண்பகல் 12. 15மணிக்கு தமிழக அரசு தெரிவிக்க வேண்டும் என தலைமை வழக்கறிஞர் ரவீநத்திரனிடம் கூறிய நீதிபதிகள் வழக்கை நண்பகல் 12. 15 மணிக்கு தள்ளிவைத்தனர்.