ரஷ்யா-உக்ரைன் இடையே 2 வருடத்திற்கும் மேலாக போர் நடந்து வருகிறது. இந்த போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க அதிபர் டிரம்ப் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.
இது தொடர்பாக வெள்ளைமாளிகையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த டிரம்ப் கூறியதாவது: “எங்களுடைய பிரதிநிதிகள் ரஷ்யாவுக்குச் செல்ல இருக்கின்றனர். ரஷ்யா போர் நிறுத்தத்தை ஏற்றுக்கொள்ளும் என்று நான் நம்புகிறேன். ரஷ்யாவுக்கு பேரழிவினை ஏற்படுத்தும் அந்நாட்டுக்கு மோசமான விளைவுகளை உண்டாக்கும் காரியங்களை என்னால் செய்ய முடியும். அம்முடிவினை நான் விரும்பவில்லை. ஆனால் நான் அமைதியைக் காண விரும்புகிறேன்.1 மாத போர் நிறுத்தத்தை ஏற்றுக் கொள்ளாவிட்டால் ரஷ்யா குறிப்பிடத்தகுந்த பொருளாதார தடைகளை சந்திக்க வேண்டியது இருக்கும்” என்று தெரிவித்தார்.
இதனிடையே, உக்ரைனுடன் போர்நிறுத்தத்துக்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் ஒப்புக்கொள்வார் என்றாலும் அதற்கு முன்பாக தனது நிபந்தனைகளை நிறைவேற்ற வேண்டும் என்று விரும்புகிறார். இதனால் பேச்சுவார்த்தை இழுபறியாக வாய்ப்புள்ளது என்று கூறப்படுகிறது.
இதனிடையே, காசா மற்றும் உக்ரைன் விவகாரங்களில் மத்தியஸ்தராக இருந்த ட்ரம்ப்பின் பிரதிநிதி ஸ்டீவ் விட்கோஃப் இந்த வாரத்தில் ஒப்பந்தம் குறித்து விவாதிக்க ரஷ்யா செல்வார் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது. ரஷ்ய அதிபருடன் தனிப்பட்ட முறையில் பேசுவது குறித்து எதுவும் தெரிவிக்காத அமெரிக்க அதிபர், ரஷ்யா போர் நிறுத்தத்தை ஏற்கும் என நம்புவதாக உறுதிப்படுத்தினார்.