காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி நியாய பாதயாத்திரை நடத்தி வருகிறார். மணிப்பூரில் தொடங்கிய யாத்திரை தற்போது பீகார் மாநிலதை கடந்து இன்று காலை பீகார்- மேற்கு வங்க எல்லையான மால்டா அடுத்த கட்டிகார் என்ற இடத்தில் வந்தது. ராகுல் காந்தி ஒரு காரில் வந்து கொண்டிருந்தார். அப்போது அவரது காரின் மீது சரமாரி கற்கள் வீசப்பட்டன. இதில் அந்த காரின் பின்பக்க கண்ணாடி முழுவதும் உடைந்து நொறுங்கியது. போலீசார் தலையிட்டு, கல்வீசியவர்களை விரட்டினர். அதன் பிறகு ராகுல் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.